Skip to playerSkip to main content
  • 8 years ago
தயாரிப்பாளர் பட்டியல் சேகர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 63. இவர் இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் நடிகர் கிருஷ்ணாவின் தந்தை ஆவார். 'ராஜதந்திரம்' படத்தில் வில்லனாகவும் நடித்திருக்கிறார் பட்டியல் சேகர்.
பரத், ஆர்யா நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளிவந்த படம் 'பட்டியல்' படத்தை சேகர் தயாரித்தார். அதன்பின்னர் பட்டியல் சேகர் என்ற பெயரில் வலம் வந்த இவர் 'கழுகு', 'அலிபாபா' ஆகிய படங்களையும் தயாரித்தார்.கடந்த ஒருவாரமாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சேகர், சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை 7.30 மணியளவில் திடீரென சேகருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது.
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். பட்டியல் சேகரின் உடல் அஞ்சலிக்காக, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Producer Pattiyal sekar passes away. He is the father of director Vishnuvardhan and actor Krishna.

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended