Skip to playerSkip to main contentSkip to footer
  • 6 years ago
நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக விஷால் வெளியிட்ட வீடியோ, 'பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி இருப்பதாக' சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா கடுமையாக விமர்சித்துள்ளார். 2019-2022-ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வருகிற 23-ம் தேதி நடைபெற இருக்கிறது. ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடைபெறும் இத்தேர்தலில், விஷால், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இருதரப்பும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இரு அணியினரும் முன்னணி நடிகர்களை சந்தித்து ஆதரவு பெற்று வருகின்றனர்.


#RadhikaSarathkumar
#NadigarSangam
#Vishal
Be the first to comment
Add your comment

Recommended