திரில்லர் படங்களை இயக்குதில் புகழ் பெற்ற இயக்குனர் சுனில்குமார் தேசாய், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் இயக்கியுள்ள படம் உச்சக்கட்டம். சிங்கம் 3 படத்தில் வில்லனாக நடித்த தாகூர் அனூப் சிங், இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். சாய் தன்ஷிகா, தன்யா ஹோப் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். வேதாளம் படத்தில் நடித்த கபீர் துஹான் சிங் இத்திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ஆடுகளம் கிஷோர், ஷ்ரவன் ராகவேந்திரா, வம்சி கிருஷ்ணா, ஷ்ரத்தா தாஸ் ஆகியோரும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Be the first to comment