Skip to playerSkip to main content
  • 8 years ago
பழைய படங்களை புது மெருகேற்றி டிஜிட்டலில் வெளியிடுவது இப்போது அதிகரித்து வருகிறது. எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப் பெண், எங்க வீட்டுப் பிள்ளை போன்ற படங்களில் இப்படி வெளியாகின. அடுத்து சிவாஜி கணேசன் நடித்த கர்ணன், சிவகாமியின் சபதம், வசந்த மாளிகை போன்ற படங்களும் வெளியாகின. ரஜினிகாந்தின் பாட்ஷா படத்தை புத்தம் புதிதாக டிஜிட்டலில் வெளியிட்டு நல்ல லாபம் பார்த்தார்கள். அடுத்து கமல் ஹாஸன் படங்களையும் இப்படி டிஜிட்டல் மயமாக்கும் வேலை நடந்து வருகிறது.

33 ஆண்டுகளுக்கு முன் ராஜசேகர் இயக்கத்தில் வெளியான படம் காக்கி சட்டை. கமல் ஹாஸன், அம்பிகா, சத்யராஜ் நடித்த பக்கா கமர்ஷியல் படம். இளையராஜாவின் இசையில் அத்தனை பாடல்களும் மெகா ஹிட்டடித்தன. சத்யா மூவீஸ் தயாரித்த இந்தப் படம் கமல் ஹாஸனின் கேரியரில் மிகப் பெரிய வசூலைக் குவித்த படமாகும். இந்தப் படத்தைத்தான் மீண்டும் டிஜிட்டல் முறையில் உலகெங்கும் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். டார்வின் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் இந்தப் படத்தை டிஜிட்டலில் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் உலகெங்கும் வரும் மார்ச் மாதம் ரிலீஸ் செய்கிறது.


Kamal Haasan's 80's blockbuster Kakki Sattai will be rereleased after 33 years.

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended