பொதுவாக தமிழில் காமெடி பேய்ப் படங்கள்தான் பெரிதாகப் போகின்றன. ஹாலிவுட் டைப்பில் சீரியஸ் பேய்ப் படங்கள் வருவது குறைவுதான். அவள் படமாவது அந்தக் குறையைப் போக்கியிருக்கிறதா? காமெடி, பாடல்களே இல்லாமல் ரொம்ப நாளைக்குப் பிறகு பயமுறுத்தும் பேய்ப் படம். தியேட்டர்களில் அலறல் சத்தம் கேட்கும் அளவுக்கு ஒரு பேய்ப் படம் என்றால் அவள்தான். குறிப்பாக இடைவேளைக்கு முந்தைய பகுதி. இந்தப் படத்தின் ஸ்க்ரிப்டை எழுதி இருப்பவர் சித்தார்த்தான். உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதை என்பதால், ஒருவித உயிர்ப்புடன் உள்ளது படம். காதல் 2 கல்யாணம் படம் இயக்கிய மிலிந்த் ராவின் இரண்டாவது படம் இது. பொதுவாக இரண்டாவது படத்தில்தான் பெரும்பாலும் சொதப்புவார்கள். இவர் முதல் படத்தில் சறுக்கி, இரண்டாவது படத்தில் கலக்கியிருக்கிறார்.
Be the first to comment