கல்யாண செலவிற்காக 62 மாடி கட்டிடத்தில் தொங்கிய நபர்.. தவறி விழுந்து மரணம் -வீடியோ

  • 6 years ago
சீனாவை சேர்ந்த ஸ்டாண்ட் கலைஞர் ஒருவர் வித்தியாசமான சாதனை ஒன்றிற்கு முயற்சி செய்யும் போது மரணம் அடைந்தார். 'வு யோங்னிங்' என்ற அந்த நபர் 62 மாடிக் கட்டிடத்தில் இருந்து விழுந்து மரணம் அடைந்து இருக்கிறார்.

இவர் தன்னுடைய கல்யாண செலவிற்காக இந்த சாதனையை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு நிறைய மருத்துவ செலவுகளும் இருந்துள்ளது.

தற்போது இவர் சாதனையின் போது கீழே விழும் வீடியோ வெளியாகி இருக்கிறது. நெஞ்சை உறைய வைக்கும் வகையில் இருக்கும் வீடியோ அவர் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.பெய்ஜிங்கில் இருக்கும் சாதனை கலைஞர்களில் மிகவும் வித்தியாசமானவர் வு யோங்னிங். திடீர் என்று ஏதாவது உயரமான கட்டிடத்திற்கு சென்று அங்கிருந்து வித்தியாசமான சாதனை ஒன்றை செய்து வீடியோவாக வெளியிடுவது இவரது வழக்கம். இவரது வீடியோவிற்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்த வீடியோக்களை பார்த்து பலர் இவரை சீன படங்களுக்கு ஸ்டாண்ட் செய்ய அழைத்து இருக்கின்றனர்.இவரது சாகசங்களை பார்த்த போலீஸ் இவரை பல முறை எச்சரிக்கை செய்து இருக்கிறது. மேலும் இவரும் சில சமயம் கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். சீனாவில் இருக்கும் 'வெய்பு' என்ற சமூக வலைதளத்தில் இவர் மிகவும் வைரலாக இருந்தார். இவருக்கு அங்கு 60,000 பின்தொடர்பாளர்கள் இருந்தார்கள். இவர் போடும் எல்லா வீடியோக்களும் வைரல் ஆகும்.

Recommended