Com_Theniyaan- பிறத்தியாள்/vdo

  • 13 years ago
தோழர் தெணியான் வாழ்வனுபவங்கள்-2

யாழ் பல்கலைக்கழகத்துக்குள்ளயையா..., சாதியத்தினுடைய அம்சம்... மிக இறுக்கமாக உள்ள ஒரு உயர்ந்த கல்விப்பீடம் யாழ்ப்பாணம். அவர்களுடைய சாதிய நோக்கு மிக நாசூக்கானதும், நாகரீகமானதும். ஒன்று உங்களுக்குச் சொல்ல விரும்பிறன்... இந்த படிப்பறிவில்லாத சாதாரண மனிதன் இருக்கிறானெல்லோ... அவன் சாதி பாக்கேக்க எனக்குக் கோபம் வாறயில்ல. நான் அவன சினக்கிறதுமில்ல. ஏன் தெரியுமோ...? நானவனப் பார்த்து அனுதாபப்படுகிறதுதான் கூட, ஏனெண்டால் அது அவனுடைய அறியாம. அவன் இந்த சமுகத்தில இப்பிடி வளந்து வந்திட்டான், அவனுக்கத மீற முடியாமலிருக்கு...

இந்தப் படிச்ச போக்கிலியள் இருக்கிறாங்களெல்லோ..., கல்விமான்கள் இருக்கிறாங்களெல்லோ.. இவங்கள் மிக நாசூக்கா, நாகரீகமாப் பாப்பாங்கள். இதுக்கு ஏற்ற உதாரணம் எங்கட உயர் கல்விப்பீடம்தான்.

நன்றி: ஜீவமுரளி