கலைமங்கை உருவம் கண்டு காதல் கொண்டு கனியாத மனித உள்ளம் எங்கே உண்டு கண்ணே! கமல மலரை வென்று திகழும் முகத்தில் ரெண்டு கருவண்டு விளையாடும் காட்சி வேறெதில் உண்டு!
எழில் சிந்தும் இளமை கொண்டு நேரில் நின்று ஆ...
அலைமோதும் இன்பம் வேறெதிலே உண்டு! வளம் பொங்கும் உருவம் கண்டு போதை கொண்டு மயங்காத மங்கை உள்ளம் எங்கே உண்டு! அன்பே வளம் பொங்கும் உருவம் கண்டு!
கை வளையல் போடிம் சண்டை, என்றும் கன்னல் இசை பாடும் கண்டை சுழலும் மைவிழியில் மேயும் , பெண் தெய் வந்து மெய்யுருக பாயும் ஒன்றை!
துள்ளி வந்து ஆண்பிள்ளை துணை தேடும் போது தூரநின்று ஆட எண்ணும் பெண் கொடியேது!
என்னச் சோலையில் நின்று இருகரமும் இணைந்து படர்ந்து மகிழ எழில் வளர சுகம் இணைய மனம் மலரும் பரந்து விரைந்து குலுங்க! துணையது உறவினில் துணிந்திடும் நினைவினில் சுவைதரும் சுதந்திர நிலைபெறுக! ஒரு குரல் பாட சிருமயிலாட குளிரும் முகங்கள் அருகினில் நெருங்க! புதுநிறமே பெறும் தனிற் விரல் தரும் குறி அபிநயங்கள் விளங்க!
அலைகடலே நிலவெனவே அனுதினமே! தழுவி இனிய நலம் ஒருங்க!
பனிமலர் இதழ் அமுதனை அருந்த! பல கதைகளும் கவிதையும் முழங்க! சுகம் வழங்க மதி மயங்க விரைந்து தனை மறந்து அலை கடந்துவரும்!....
Be the first to comment