ஆடும் மயிலோடு விளையாடும் வடிவேலா! அன்பர்த் தொழும் இன்பமயமான கதிர்வேலா!
ஈடு இணையற்ற எழில் ரூப மணிவேலா! எண்ணறிய ஜோதி ஒளி வீசும் சுடர்வேலா! கூடும் அடியார்கள் துதி கூறும் புகழ்வேலா! குன்றுதோர் ஆடும்குண குமரகுரு வேலா!
ஊடுருவும் கேடு, வினை ஓட்டும் கூர்வேலா! ஓம் எனும் பிரணவமுறை பொருள் ஞானவேலா! வேடுவ மகள் வள்ளி வேட்ட பதிவேலா!
விண்ணவர் படைகாவலா வீரவலா! கூறுபகை சூரனை வதைத்த ஜெயவேலா! சொந்தமென குஞ்சரியை கொண்ட குணவேலா! பாடும் தமிழ் பாமாலை சூடும் மணவேலா! பழனிமலை வாழும் பராசக்திவேலா! பராசக்திவேலா!
Be the first to comment