மனதில் இருக்குது ஒன்னு அதை கணக்காய் காட்டுது கண்ணு! ஆ...
மனதில் இருக்குது ஒன்னு அதை கணக்காய் காட்டுது கண்ணு! மறைக்க முயன்றாலும் முடியலே! வாய் திறந்து சொல்லத்தான் துணியலே!
இனிக்கும் கனவுகள் மறக்குமா! மனம் எண்ணிப் பார்க்காமல் இருக்கும்மா! மணக்கும் மலர்சோலை மயக்கும் இளந்தென்றல்! வரவை எங்கேனும் மறுக்குமா! என்னிப் பார்த்தாலே போதுமா! மெய் இன்பம் அதனாலே நேருமா! கண்ணில் விளையாடும் கருத்தில் உறவாடும் கனவு நனவாக மாறுமா!
எளிதில் பெண் மனம் விரும்பாது! அது விரும்பியப் பின்னால் வெறுக்காது. கொடியை கிளையும் தள்ளாது! அது தடைகள் எதுவும் சொல்லாது! வளரும் காதல் மாறாது. நம் வாழ்வில் பிரிவே நேராது!
Be the first to comment