#BOOMINEWS | அதிமுகவின் வெற்றி வாய்ப்பு தடுக்கும் சக்தி தமிழகத்தில் எந்த கட்சிக்கும் இல்லை அதிமுக ஒருங்கிணைப்பாளர் OPS பேச்சு

  • 3 years ago
ராணிப்பேட்டை மாவட்டம் வன்னிவேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் தேர்தல் ஆலோசனைகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 1% ஓட்டுக்களில் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டோம். அதனை கவனத்தில் கொண்டு உத்வேகத்துடன் செயலாற்றி இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றார். வரலாற்றில் நிலைத்து நிற்கும் தன்னிறைவு, சத்துணவு ஆகிய திட்டங்களை தந்தவர் எம்.ஜி.ஆர். எனவும் அதிமுகவை அழிக்க திமுக தலைவர் கருணாநிதி போட்ட திட்டங்களை முறியடித்து இயக்கத்தை காத்து வறுமையை ஒழிக்கவும் அனைத்து தரப்பு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பல திட்டங்களை வகுத்தவர் ஜெயலலிதா என புகழாரம் சூட்டினார். திமுக அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளும் காற்றில் பறக்கிறது என்ற அவர், நீட்தேர்வை தடுப்பதாக கூறினர். ஆனால் முடிந்ததா? பொய்யை மட்டுமே சொல்லி மக்களை ஏமாற்றி விட்டனர். எனவே திமுகவினர் வாக்கு சேகரிக்க வந்தால் சொன்னீர்களே செய்தீர்களா? என மக்கள் கேட்க வேண்டும் என்றார். அதிமுக ஆட்சியின் போது 3ல் ஒரு பங்கு நிதியை கல்விக்காக ஒதுக்கியவர் ஜெயலலிதா. இதனால் படித்தவர் சதவீதம் 52% ஆக உயர்ந்துள்ளது. ஒரு மாநிலம் அனைத்து தரப்பிலும் மேம்பட வேண்டுனெனில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும். ஆனால் திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, வழிப்பறி, நாள்தோறும் நடைபெறுகிறது. சட்டம் ஒழுங்கு சீர் கெட்டிருந்தால் தொழில் தொடங்க யாரும் முன் வர மாட்டார்கள் என்று பேசியதோடு, திமுக செய்த அலங்கோலங்களை எடுத்து கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்குமாறு அறிவுறுத்தினார். தொண்டன் முதல்வராக முடியாது அனைத்து மாநிலங்களிலும் உள்ள நிலையில் அதனை நிரூத்துக்காட்டியது அதிமுக. ஊரக உள்ளாட்சி தேர்தல் தொண்டர்களுக்கான தேர்தல். அனைவரையும் வெற்றி பெற வைக்க வேண்டிய கடமை எங்களுக்கு (தலைமைக்கு) உள்ளது என்ற அவர், அதிமுகவின் வெற்றி வாய்ப்பை தடுக்கும் சக்தி தமிழகத்தில் எந்த கட்சிக்கும் இல்லை என கூறினார்.

Recommended