#BOOMINEWS | மின்வாரியபணியின் போது உயிரிழந்த 9 குடும்பத்தினை சார்ந்த வாரிசுதாரர்களுக்கு பணி நியமனம்

  • 3 years ago
மின்வாரியப் பணியின் போது உயிரிழந்த 9 குடும்பத்தை சேர்ந்த வாரிசுதாரர்களுக்கு பணி நியமண ஆணை வழங்கிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்

விருதுநகர் மாவட்டத்தில் மின்பகிர்மான பணியின் போது 9 பேர் மரணமடைந்தனர். பணியின் போது மரணம் அடைந்த 9 குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுதாரர்களுக்கு மின்வாரியத்தில் பணிபுரிய பணி நியமன ஆணையை மாண்பு மிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்கவும், மாண்பு மிகு மின்சார துறை அமைச்சர் அவர்களின் ஆலோசனைப்படியும் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் பணிநியமன ஆணைகளை வழங்கினார். மேலும் இந்த நிகழ்வின்போது மேற்பார்வை பொறியாளர் தேன்மொழி, செயற்பொறியாளர் அகிலாண்டேஸ்வரி, நிர்வாக அலுவலர் ஜவகர், மற்றும் முத்துமாரி, சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Recommended