#BOOMINEWS | பாவாலி பஞ் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு |

  • 3 years ago
விருதுநகர் பாவாலி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் திரு மொட்டையசாமி அவர்கள் மருமகளும் அட்வகேட் எம். சிவராம் அவர்கள் மனைவியுமான ராமுத்தாய் சிவராம் அவர்கள் இன்று பூட்டு சாவி சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பாவாலி ஊராட்சி பஞ்சாயத்துக்குட்பட்ட அய்யனார் நகர் ,கலைஞர் நகர், பராசக்தி நகர், பாவாலி, ஆகிய பகுதிகளில் மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் வசதி ,சாலை வசதி, தெருவிளக்கு வசதி மற்றும் கழிப்பிட வசதி, மற்றும் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் நேரடியாக பெற்றுத் தருவேன் என்று மக்களிடம் வாக்குறுதி அளித்தார். ஆகையால் எனக்கு பூட்டு சாவி சின்னத்தில் பொது மக்களாகிய தாங்கள் வாக்களித்து தன்னை அமோக வெற்றி பெறச் செய்யுமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Recommended