#BOOMINEWS | கோவை பழமையான உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோயிலில் அம்மனின் வலது கண் திறந்ததாக பரவிய தகவல் |

  • 3 years ago
கோவை : கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள 30 ஆண்டுகள் பழமையான உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோயிலில் அம்மனின் வலது கண் திறந்ததாக பரவிய தகவலை அடுத்து ஏராளமான பொதுமக்கள் அப்பகுதிக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

கோவை டவுன்ஹால் சிவியர் வீதியில் உள்ளது 30 ஆண்டுகள் பழமையான உஜ்ஜயினி மாகாளி அம்மன் திருக்கோவில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேக விழா நடைபெற்றது அப்பகுதியில் உள்ள பலரும் இக் கோவிலில் சாமி தரிசனம் செய்து வந்த நிலையில் திடீரென நேற்று அம்மனின் வலது கண் திறந்து இருப்பது போலக் காட்சியளிப்பதாக தகவல் பரவியது. காட்டுத்தீ போல பரவியது இத்தகவலை எடுத்து அப்பகுதிக்கு வந்த ஏராளமான பொதுமக்கள் மாகாளியம்மனை மனமுருகி தரிசித்துச் சென்றனர். மேலும் அம்மனின் வலது கண் திறந்து இருப்பது போல் எழுந்தருளிய காட்சியைக் கண்டும் பரவசத்தில் ஆழ்ந்தனர். அரங்கேறியுள்ள இச்சம்பவம் தங்கள் வாழ்வில் நல்லது நடக்கும் என்பதற்கான அறிகுறி என்று அப்பகுதி பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Recommended