#BOOMINEWS | கதவைத் திறந்தாள் கரடிக் கூட்டம் கோத்தகிரியில் அன்றாடம் அரங்கேறும் கரடியின் உலா |

  • 3 years ago
கதவைத் திறந்தாள் கரடிக் கூட்டம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அன்றாடம் அரங்கேறும் கரடியின் உலா...

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.பொதுவாக வனப்பகுதிகளை ஒட்டிய கிராமப் பகுதிகளில் உலா வந்து பொது மக்களை அச்சுறுத்தி வந்த கரடிக் கூட்டம் தற்போது நகர் பகுதியில் உலா வர தொடங்கி விட்டது.கோத்தகிரி நகர் பகுதியில் பழக்கடைகள் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கரடி ஒன்று இரவு நேரத்தில் கடையை உடைத்து கடையினுள் இருந்த பழங்களை சாப்பிட்டு சென்றுள்ளது.இரவு நேரத்தில் தான் மக்களை அச்சுறுத்தி வருகிறது என்றால் பகல் நேரத்திலும் பேருந்து நிலைய அருகிலும்,அரசு மருத்துவ மனை அருகில் உள்ள மாதா கோவில் செல்லும் சாலையில் உலா வந்தது பொதுமக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.பகல் மற்றும் இரவு நேரங்களில் கரடிகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோத்தகிரி வாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இருப்பினும் பல்வேறு கிராமங்களிலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் வனத்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது

Recommended