அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு அம்மா சொல்றதை கேட்ட ராணி மாதிரி இருக்கலாம் !#abuse

  • 4 years ago
Reporter - ஆ.விஜயானந்த்
`சார்... நான் ப்ளஸ் ஒன் ஸ்டூடன்ட். திருவொற்றியூர்ல இருக்குற மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல படிக்கிறேன். கொரோனா காலத்துல குடும்பக் கஷ்டம் அதிகமாகிடுச்சு. அப்பாவுக்கும் வேலையில்லை. அதனால என்னைத் தவறான வழிக்கு எங்கம்மா போகச் சொல்றாங்க. போலீஸ்ல புகார் கொடுத்தாலும் ஏத்துக்க மாட்டேங்கறாங்க.” - அடிபட்ட பறவையைப்போலிருந்த அந்தச் சிறுமி, கண்களில் கண்ணீர் ததும்பப் பேசியதைக் கேட்டதும் தூக்கிவாரிப்போட்டது.
அந்தச் சிறுமியை நம்மிடம் அழைத்துவந்தார் குழந்தைகள்நலச் செயற்பாட்டாளர் ஷெரின் போஸ்கோ. “என்ன நடந்தது?” என்று கேட்டோம். தயங்கியபடியே பேசினார் சிறுமி. “எங்க அப்பா வெங்கடேசன் பொழுதன்னிக்கும் குடிச்சிட்டு வந்து படுத்துக் கெடப்பாரு. வீட்டுல என்ன நடந்தாலும் அவருக்குத் தெரியாது. ஒரு வருஷத்துக்கு முன்னாடி எங்க வீட்டுக்குப் பக்கத்துல அக்பர் என்பவர் குடிவந்தார். அவருக்குக் கல்யாணமாகி மூணு குழந்தைகள் இருக்காங்க. அவர் எங்கம்மாகிட்ட பேச ஆரம்பிச்சார். அம்மாவும் அவர்கிட்ட பழகினார். கொஞ்ச நாள்ல பாரிமுனையில இருக்குற முனி என்பவரிடம் அம்மாவை அறிமுகப் படுத்தியிருக்கார் அக்பர்.

Recommended