சங்கரன்கோவிலிலுள்ள ஒரு தியேட்டர் வளாகத்தில், பிறந்து நான்கு நாள்களேயான குழந்தை பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தை எரிக்கப்பட்டதற்கான காரண்ம் குறித்து போலீஸார் விசாரித்துவருகிறார்கள்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகிலுள்ள ரெயில்வே பீடர் சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் அந்தச் சாலையில் திரையரங்கம் ஒன்று இருக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்கம் செயல்படாமல் மூடிக்கிடக்கிறது. #baby