கேட்ஸ் சுமக்கும் அவதூறுகள்...அறக்கட்டளையின் 1,125 கோடி !

  • 4 years ago
Reporter - தி.முருகன்


உலகெங்கும் பயன்பாட்டிலிருக்கும் தடுப்பூசிகளில் ஐம்பது சதவிகிதம் இந்தியாவில்தான் தயாராகின்றன. விரைவில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ள இரண்டு கொரோனா தடுப்பூசிகளைத் தயாரிக்கும் பணியையும் ஓர் இந்திய நிறுவனம்தான் செய்துவருகிறது. அது, புனே நகரிலுள்ள `சீரம் இன்ஸ்டிட்யூட்.’ உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் அது. அந்த நிறுவனத்துக்கு பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை 1,125 கோடி ரூபாய் நிதியுதவி அளித்து, 10 கோடி கொரோனா தடுப்பூசிகளைப் பெறுவதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, ‘கொரோனா தடுப்பூசியை மொத்தமாக வாங்கி, அதில் கொள்ளை லாபம் அடிக்கப் பார்க்கிறார் பில் கேட்ஸ்’ என்று சமூக வலைதளங்களில் தகவல் பரப்புகிறார்கள். இது உண்மையா?