Skip to playerSkip to main contentSkip to footer
  • 11/6/2020
இலங்கையின் அம்பாரா மாவட்டத்தில் யானைகள் உணவுக்காக குப்பை மேடுகளில் சுற்றித்திரியும் சம்பவம் விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. '
உலகம் முழுவதும் நகரமயமாக்கல், மக்கள் தொகைப் பெருக்கம், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு வசித்து வரும் வனவிலங்குகள் அனைத்தும் இருப்பிடமின்றி அவதிக்குள்ளாகி வருகின்றன. மேலும் தொழிற்சாலை கழிவுகள் பசுமைக்குடில் வாயுக்கலால் ஏற்படும் பருவநிலை மாற்றம் வனப்பகுதிகளில் வறட்சியை ஏற்படுத்தி வன உயிரிகளுக்கு உணவுப்பற்றாக்குறையை உண்டாக்கி வருகிறது.

Category

🗞
News

Recommended