விஜய் பட பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடிய தர்ஷன்.. வாயடைத்துபோன ரசிகர்கள்.. வைரலாகும் காணொளி…!
பிக்பாஸ் 3 சீசன் மூலம் மக்களின் மனதில் வெற்றியாளராக இடம்பிடித்த தர்ஷன் தற்போது விஜய் பாடல் ஒன்றிற்கு நடனம் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் தான் தர்ஷன். இவர் தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர்ருக்கான முழு தகுதியும் உள்ளது என்று ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மட்டுமின்றி, போட்டியாளர்களும் கூறி வந்தனர்.
ஆனால் யாரும் எதிர்பாராத தருணத்தில் வாக்குகள் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு தர்ஷன் வெளியேறியது ரசிகர்களை சோகத்திலும், கோபத்திலும் ஆழ்த்தியது.
ஆனாலும் பிக்பாஸின் வெற்றியாளர் இவர்தான் என கூறிவருகின்றனர். இவரின் ஆதரவு முகேனுக்கு இருந்ததால் முகேனை வெற்றியாளராக்க தர்ஷன் ரசிகர்களும் முகேனுக்கு வாக்குகளை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் தர்ஷன் நடனமாடிய விஜய் பட பாடலான திருமலை படத்தில் இருந்து தாம் தக்க தீம் தக்க பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும், இதைக்கண்ட விஜய்யின் ரசிகர்களும் தர்ஷனை பாராட்டி வருகின்றனர். இவரும் தளபதி ரசிகனா என்று வாழ்த்தி வருகின்றனர்.
Be the first to comment