Skip to playerSkip to main contentSkip to footer
  • 7/26/2019
புதுச்சேரியில் நடைபெற்று வரும் தென்மண்டல அளவிலான கைப்பந்து போட்டியினை பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இந்திய விளையாட்டு ஆணையத்தின் புதுச்சேரி மையம் சார்பில் தென் மண்டல அளவிலான கைப்பந்து போட்டிகள் இன்று தொடங்கியது. இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் இன்று முதல் 3 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் ஆந்திரா கேரளா கர்நாடக தெலுங்கானா தமிழ் நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்த 8 ஆண்கள் அணியும்இ 6 பெண்கள் அணியும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதி போட்டியில் வெற்றிபெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

des : South Zone Volleyball Tournament on behalf of Puducherry Center of Indian Sports Authority

Category

🗞
News

Recommended