ED RAID / தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும் திமுக துணை பொது செயலாளர் ஐ பெரியசாமியின் வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 11 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் நகை பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்படவில்லை என சொல்லப்படுகிறது. ஒரு சில ஆவணங்களை அதிகாரிகள் டிஜிட்டல் மயப்படுத்தி எடுத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் 11 மணி நேரம் வீட்டுக்குள்ளேயே இருந்த அமைச்சர் ஐ.பெரியசாமி சோதனை நிறைவு பெற்றதும், தனது வீட்டில் சோதனை நடத்திய ஒவ்வொரு அமலாக்கத்துறை அதிகாரிக்கும் தனித்தனியாக சிரித்த முகத்துடன் கை கொடுத்து நல்லபடியா போய்ட்டு வாங்க என வழிய அனுப்பி வைத்தார். அவரது மகன் ஐபி செந்தில்குமார் தனது வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகளை தொண்டர்களை அதட்டி வழி ஏற்படுத்தி அனுப்பி வைத்தார்.
ED Raid: ஸ்கெட்ச் அமைச்சருக்கு இல்ல.. ஐ.பெரியசாமியின் மகன், மகள் வீட்டில் அள்ளி செல்லப்பட்ட ஆவணங்கள்! பரபர :: https://tamil.oneindia.com/news/dindigul/ed-raid-at-tamil-nadu-minister-i-periyasamy-house-son-and-daughter-properties-targeted-728677.html?ref=DMDesc
ஐ.பெரியசாமி, மகன் செந்தில் குமார், மகள் வீடுகளில் நடந்த ED சோதனை.. 17 மணி நேரத்திற்கு பிறகு நிறைவு! :: https://tamil.oneindia.com/news/chennai/ed-concludes-14-hour-raid-at-minister-i-periyasamy-son-palani-mla-ip-senthilkumar-s-house-728627.html?ref=DMDesc
ரெய்டு மூலம் நம்மை மிரட்ட நினைத்தவர்கள் மிரண்டு போயிருக்கின்றனர்.. CPI மாநாட்டில் முதல்வர் பேச்சு! :: https://tamil.oneindia.com/news/chennai/cm-stalin-at-cpi-conference-those-who-tried-to-intimidate-us-with-raids-are-now-intimidated-728623.html?ref=DMDesc