3 கட்ட லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் பா.ஜ. சின்னம் தாமரைக்குக் கீழே BJP என எழுதப்பட்டிருப்பதாக புதிய சர்ச்சையை எதிர்க்கட்சிகள் கிளப்பியுள்ளன. தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளன. ''BJP என இருப்பதை நீக்குங்கள்; அல்லது எங்கள் சின்னத்தின் கீழ் எங்கள் கட்சி பெயரை சேருங்கள்'' என எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. அது, BJP அல்ல என்று, தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. ''தாமரை சின்னத்தின் அவுட்லைன் தெளிவில்லாமல் இருந்தது; அதை Bold செய்ய பா.ஜ. கேட்டது; அதன்படி, தாமரை சின்னத்தின் கீழ் தண்ணீர் திவலைகள் சேர்க்கப்பட்டது; அது F P போல தெரிகிறது; அவ்வளவுதான்; BJP அல்ல என, ஆணையம் கூறியுள்ளது.