அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படத்தின் ஆந்தம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த படத்தில் அயர்ன்மேனுக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படம் வரும் 26ம் தேதி இந்தியாவில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் தமிழ் ஆந்தமை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டுள்ளார். சும்மா சொல்லக் கூடாது, ஆந்தம் அருமையாக உள்ளது. ஆந்தம் வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர். அவெஞ்சர்ஸ் படத்தில் அயர்ன்மேனுக்கு தமிழில் டப்பிங் பேசியுள்ளார் விஜய் சேதுபதி. பிளாக் விடோ கதாபாத்திரத்திற்கு ஆண்ட்ரியா டப்பிங் பேசியுள்ளார்.
Be the first to comment