பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து, எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் மூன்றாவது படம் சிந்துபாத். இந்த படத்தை கே புரோடக்ஷன்ஸ் சார்பில் ராஜராஜன் மற்றும் வான்சன் மூவிஸ் ஷான் சுதர்ஷன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். ஒரு எளிய மனிதன் ஒரு எளிய வாழ்வை வாழ இந்த சமூகம் எவ்வளவு பெரிய தடையாக உள்ளது என்பதையும், அதற்கு தீர்க்கமான தீர்வையும் பேசும் படமாக சிந்துபாத் உருவாகியுள்ளது.
Be the first to comment