உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்பூரில் உள்ள வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருப்பவர் ராஜாராம் யாதவ்.
காஜிப்பூர் கல்லூரி விழாவில் உரையாற்றிய அவர், யூத்துன்னா எப்படி இருக்கணும் தெரியுமா? என பேச்சைத் துவங்கினார். ''பாறையை எட்டி உதைச்சா தண்ணீ வரணும் அவன்தான் யூத்; ஒரு காரியத்தை நினைச்சா சக்சஸ்புல்லா முடிக்கணும் அவன்தான் நம்ம யூனிவர்சிட்டி ஸ்டூடண்ட்
யாராவது உங்கள சண்டைக்கு இழுத்தா கண்ண கசக்கிக்கிட்டு என்கிட்ட வராதீங்க; சண்டைக்கு இழுத்தவனை அடிங்க; முடிஞ்சா அடிச்சு கொல்லுங்க; நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி அனைவரையும் மிரள வைத்தார் VC யாதவ். ராஜாராம் யாதவ் துணைவேந்தர் மாணவர்களிடையே வன்முறையை தூண்டும் துணைவேந்தரை நீக்க வேண்டுமென கோரிக்கைகள் வலுத்துள்ளன.