மஹிந்திரா அல்டுராஸ் ஆஃப் ரோடு டிரைவ் - முதல் அபிப்ராயம்

  • 6 years ago
மஹிந்திரா அல்டுராஸ் ஆஃப் ரோடு பெர்ஃபார்மென்ஸ்: ஜெய்ப்பூர் மோட்டார் ஸ்போர்ட் கிளப் அருகே உள்ள மணல் குன்றுகளில், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரை நாங்கள் ஓட்டி பார்த்து, அதன் திறன்களை கண்டறிந்தோம். இன்றைய தேதி வரை மஹிந்திராவின் மிகவும் விலை உயர்ந்த, சக்தி வாய்ந்த மற்றும் லக்ஸரியான எஸ்யூவி ஆகும். 26.95 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி இந்தியாவில் லான்ச் செய்யப்பட்டுள்ளது.

மஹிந்திரா அல்டுராஸ் காரில், 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 178 பிஎச்பி பவர் மற்றும் 420 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். லோ ரேஷியோவுடன் கூடிய 4 வீல் டிரைவ் சிஸ்டம் மூலமாக அனைத்து நான்கு வீல்களையும் 7 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் இயக்குகிறது. இதன்மூலம் ஆஃப் ரோடிற்கு ஏற்ற காராக மஹிந்திரா அல்டுராஸ் உருவெடுத்துள்ளது.

#MahindraAlturasG4 #MahindraAlturasG4review #MahindraAlturasG4testdrive #MahindraAlturasG4interior

Recommended