Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
படப்பிடிப்பு தளத்தில் நடிகை வேதிகா காயம் அடைந்தார்.
உபேந்திரா நடிக்கும் ஹோம் மினிஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் வேதிகா. இந்த படம்

கன்னடம் மற்றும் தெலுங்கில் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் பாடல் காட்சியை படமாக்க படக்குழு மலேசியா சென்றுள்ளது.
நீர்வீழ்ச்சி பகுதியில் பாடல் காட்சியை படமாக்கியபோது அட்டை பூச்சி வேதிகாவின் கால் பெருவிரலை

கடித்துவிட்டது. இதையடுத்து காயம் பட்ட தனது விரலை புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் ட்விட்டரில்

வெளியிட்டுள்ளார் வேதிகா.

மலேசியாவில் உள்ள பெட்ரோனாஸ் டவர்ஸ் அருகே பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது எடுத்த புகைப்படத்தை

ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் வேதிகா. அதை பார்த்த ரசிகர்களால் அவரை கலாய்க்காமல் இருக்க

முடியவில்லை.

தற்போது எல்லாம் கிழிந்த பேண்ட், சட்டை போடுவது ஃபேஷனாகிவிட்டது. வேதிகா பாடல் காட்சிக்காக

அணிந்திருந்த கிழிந்த பேண்ட்டை பார்த்து தான் ரசிகர்கள் கலாய்த்துள்ளனர்.


Actress Vedhika had leech bite while shooting for a song in a waterfall area in

Malaysia. Vedhika is busy qwith Upendra's upcoming movie Home minister.

#vedhika #shootingspot #injury #twitter

Recommended