Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago


பிறந்தநாள் அன்று ஓவியா தனது ரசிகர்களுடன் ட்விட்டரில் லைவ் சாட் செய்துள்ளார்.
ஓவியா தனது 27வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி அவரின் ரசிகர்கள் அனைவரும் ட்விட்டரில் ஒரே மாதிரியான டி.பி. வைத்திருந்தனர்.
இந்நிலையில் ஓவியா தனது ரசிகர்களுடன் ட்விட்டரில் லைவ் சாட் செய்துள்ளார். ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
ஓவியாவுக்கு பிடித்த இடம் எது என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் சென்னை என்று தெரிவித்துள்ளார். ஏன் என்றால் இங்கு தான் அனைவரும் உள்ளனர் என்று கூறியுள்ளார்.
போர் அடித்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு பாட்டு கேட்பேன், படம் பார்ப்பேன் என்று ஓவியா பதில் அளித்துள்ளார்.
பிறந்தநாளுக்கு பார்ட்டி எல்லாம் கிடையாது. இங்கிருக்கும் நெருங்கிய நண்பர்களுடன் டின்னர் மட்டுமே. இந்த நாளை ஸ்பெஷலானதாக ஆக்கிய ரசிகர்களுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும் என்கிறார் ஓவியா
எப்போ கல்யாணம் பண்ணிக்க போறீங்க. அப்படி ஆச இருந்துச்சுனா சொல்லுங்க நானே உங்கள கல்யாணம் பண்ணிக்குற என்ற ரசிகரிடம் பயோடேட்டா அனுப்புங்க என்று ஓவியா கூறியுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஸ்ப்ரே அடிச்சிடுவேன், கிரீன் டீ வேணும் என்று கூறியதை ரெக்கார்ட் செய்த கேமராமேன்களை பார்த்தீர்களா என்று ரசிகர் ஒருவர் ஓவியாவிடம் கேட்க ஆமாம் அதை எல்லாம் மறக்கவே முடியாது என்றார்.


Actress Oviya had a live chat with her lovely fans on her 27th birthday. Oviya army is super happy after she answered fans' questions.


#oviya #birthday #video #fans #twitter

Category

🗞
News

Recommended