பிரபல ஸ்டண்ட் மாஸ்டரின் மகனும், நடிகருமான விஜய் ஜாக்குவாருக்கு இன்று திருமணம் நடைபெற்றது. பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்தின் மகன் விஜய் ஜாக்குவார் சூர்யா(2008) என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு நிவேதா என்ற பெண்ணுடன் இன்று திருமணம் நடைபெற்றது. வடபழனி முருகன் கோவிலில் இன்று காலை திருமணம் நடந்தது. திருமண நிகழ்ச்சியில் இருவீட்டார், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். ராஜ்கிரண், ராமராஜன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, இயக்குனர் சீனு ராமசாமி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பிரபலங்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இதே வடபழனி முருகன் கோவிலில் தான் நடிகர் முனிஸ்காந்துக்கு அண்மையில் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Vijay Jaguar, son of popular stunt master Jaguar Thangam has tied the knot with Nivetha in Chennai on thursday.
Be the first to comment