டெல்லி போலீஸின் தொழில்நுட்பம் மூலம் 4 நாட்களில் 3000 குழந்தைகள் மீட்பு- வீடியோ
  • 6 years ago
டெல்லியில் கடந்த 4 நாட்களில் முக அங்கீகார அடையாள தொழில்நுட்பம் (Facial Recognition System) எனப்படும் முறை மூலம் கிட்டத்தட்ட 3000 காணாமல் போன குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களிடம் இந்த தொழில்நுட்பம் நீண்ட நாட்களாக கைவசம் இருக்கிறது. ஆனால் டெல்லி போலீஸ் இதை பயன்படுத்தாமல், சோதனை கூட செய்து பார்க்காமல் இருந்து வந்தனர். ஆனால் உச்ச நீதிமன்றம் இதை உடனடியாக பயன்படுத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று கூறியது. அதனடிப்படையில் இப்போது இவ்வளவு குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது குழந்தைகளை தொலைத்துவிட்டு தேடுபவர்களுக்கு பெரிய நல்ல செய்தியாகி உள்ளது.



Delhi police use Facial Recognition System to find 3000 missing children in 4 days. They will this tech, for 42000 more missing children
Recommended