Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் நைசாக நழுவிய நடிகரை பார்த்து மக்கள், உங்களுக்கு பணம் கிடைக்க பெண்களின் வாழ்க்கை தான் கிடைத்ததா என்று கேட்டு வருகின்றனர்.
பிக்கப் டிராப் நடிகருக்கு பெண் பார்க்க டிவி சேனல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. நிகழ்ச்சி துவங்கியபோதே இந்த ஆளு யாரையும் திருமணம் செய்ய மாட்டார் என்று பார்வையாளர்கள் அடித்துக் கூறினர்.
நடிகரும் அனைத்து போட்டியாளர்களுடனும் நெருங்கிப் பழகி கடலை போட்டு லிட்டர் லிட்டராக ஜொள்ளுவிட்டார்.
போட்டியாளர்களை பார்த்தாலே எப்பொழுது பார்த்தாலும் ஈ என்று பல்லை பல்லை காட்டி ஜொள்ளுவிட்டார் நடிகர். இறுதியில் யார் மனதையும் புண்படுத்த விரும்பவில்லை என்று கூறி ஒரு பெண்ணையும் தேர்வு செய்யவில்லை.
உங்களுக்கு படம் ஓடாமல் நிதி நெருக்கடி ஏற்பட்டால் நீங்கள் பணம் சம்பாதிக்க பெண்களின் வாழ்க்கை தான் கிடைத்ததா என்று நிகழ்ச்சியை பார்த்தவர்கள் நடிகரை விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.
மூன்றில் ஒரு பெண்ணை மனைவியாக தேர்வு செய்தால் மற்ற இரண்டு பெண்களின் திருமணம் நின்றதுபோது ஆகிவிடும் என்று கூறி எஸ்கேப் ஆனார் நடிகர். தற்போது மூன்று பெண்களின் திருமணமும் நின்றது பரவாயில்லையா அவருக்கு?
திரையுலகில் லட்டு லட்டா பார்த்த அவர் இந்த பெண்களில் யாரையும் தேர்வு செய்ய மாட்டார் என்று பலர் தொடர்ந்து கூறி வந்தது போன்றே நடந்துவிட்டது. நடிகர் பணத்தை வாங்கிக் கொண்டு நடையை கட்டிவிட்டார்.
இறுதி நாள் நிகழ்ச்சியில் நடிகர் ரொம்ப பாவம் போன்று முகத்தை வைத்துக் கொண்டு வாங்கிய காசுக்கு மேல் சூப்பராக நடித்துவிட்டு சென்றுள்ளார். இது உலகமகா நடிப்புடா சாமி என்று தான் சொல்லத் தோன்றியது.

People are unhappy with an actor who cleverly walk away from a TV programme without choosing his bride as promised.

#gossip #arya #engaveetumapillai

Category

🗞
News

Recommended