மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், ஷாலினி, ஸ்வர்ணமால்யா, அரவிந்த்சாமி ஆகியோர் நடிப்பில் 2000-ம் ஆண்டில் வெளியான திரைப்படம் 'அலைபாயுதே'. மணிரத்னம் படத்துக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியதில் இந்தப் படத்திற்கு பெரும் பங்கு உண்டு. மணிரத்னம் பட பாணியிலான காதல் என வகையே உருவானது இந்தப் படத்தால் தான். ரஹ்மான் இசை, மணிரத்னம் டச், கார்த்திக் - சக்தியின் மென்மையான காதல் என பல அழகியல் தந்த 'அலைபாயுதே' வெளிவந்து 18 வருடங்கள் ஆவதையொட்டி ஒரு நினைவுப் பகிர்வு. இன்றும் பல வகையான காதல் கதைகள் படமாகிக் கொன்டிருக்கின்றன. காதலையும், தமிழ் சினிமாவையும் தவிர்க்கவே முடியாது தான். ஆனால், அந்தக் காதல் கதைகளுக்கெல்லாம் பெஞ்ச் மார்க்காக எப்போதும் இந்த 'அலைபாயுதே' இருக்கும். ஜென் Z உலகிலும் காதல் என்கிற இதயப்பூர்வமான உணர்வு மாறாததுதானே.. அதுவரை 'அலைபாயுதே' காதல் நினைவில் கொள்ளப்படும்!
18 years since this beautiful movie 'Alaipayuthey' released. #18YearsOfAlaipayuthey