Skip to playerSkip to main contentSkip to footer
  • 4/11/2018
சமந்தா தனது காதலரான தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு இருவரும் அவரவர் படங்களில் நடிக்கச் சென்றுவிட்டனர்.
இருவருமே படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் குழந்தை பற்றி சமந்தா கூறியிருப்பதாவது,
எப்பொழுது குழந்தை பெற வேண்டும் என்று நானும், சைதன்யாவும் முடிவு செய்துவிட்டோம். எனக்கு எப்பொழுது குழந்தை வேண்டும் என்ற தேதியை நான் குறித்துவிட்டேன்.
தேதி குறித்தாகிவிட்டது. ஏதோ அந்த தேதியில் நான் நடக்கும் என்பது போன்று குறித்துவிட்டோம். நான் குழந்தை பெற்ற பிறகு அது தான் என் உலகம் என்று இருக்கும்.
வேலை செய்யும் தாய்மார்களை மிகவும் மதிக்கிறேன். குழந்தை பிறந்த பிறகு சில ஆண்டுகள் நான் எங்குமே செல்ல மாட்டேன். குழந்தையை மட்டும் கவனித்துக் கொண்டிருப்பேன்.
திருமணத்திற்கு முன்பு என்னை பற்றி மட்டுமே யோசிப்பேன். ஆனால் தற்போது குடும்பத்தை பற்றியும் யோசிக்க வேண்டி உள்ளது. வீட்டிற்கு தேவையானதை நானும், சைதன்யாவும் தான் செய்கிறோம். அது எனக்கு பிடித்துள்ளது என்கிறார் சமந்தா.

Actress Samantha said that she and her actor husband Naga Chaitanya have decided the date as to when they should have a baby. Both of them are busy with their work now.

#samantha #nagachaitanya #pregnant

Category

🗞
News

Recommended