Skip to playerSkip to main content
  • 8 years ago
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் சைலண்ட் த்ரில்லர் படமான 'மெர்க்குரி' வரும் ஏப்ரல் 13-ம் தேதி ரிலீஸ் ஆகும் என ட்ரெய்லரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி, ஏப்ரல் 13-ம் தேதி அன்றே சைலண்ட் ஃபிலிமான 'மெர்க்குரி' படம் வெளியாகும் என கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்ததால் அண்மையில் சர்ச்சையானது.
தன்னிச்சையாக முடிவெடுக்கும் அவருக்கு கண்டனங்கள் வந்தன. இதையடுத்து ஸ்ட்ரைக் முடிந்தபிறகே வெளியிடுவேன் எனக் கூறியவர் ட்ரெய்லரில் ரிலீஸ் தேதி 13 எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சமீபத்தில், "மெர்க்குரி படத்தை உலகம் முழுவதும் ஏப்ரல் 13-ம் தேதி வெளியிடுவேன். படத்தில் வியர்வை சிந்தி உழைத்தவர்களுக்கு பலன் கிடைக்கவேண்டும். சைலண்ட் படமான 'மெர்க்குரி' நிச்சயம் ரிலீஸ் ஆகும்" என ட்விட்டரில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினா கார்த்திக் சுப்புராஜ்.
அடுத்து ரஜினி படத்தை இயக்க இருப்பதால் கார்த்திக் சுப்புராஜ் திமிராகச் செயல்படுகிறார் என விமர்சனங்கள் எழுந்தன. அவர் படத்தை வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் கண்டனக் குரல்கள் எழுந்தன.
அடுத்த சில மணி நேரங்களில், ஸ்ட்ரைக் முடிவடைந்த பிறகு தான் படம் வெளியாகும். திரையுலகினரின் நலனுக்காக நடத்தப்படும் ஸ்ட்ரைக்கை மதிக்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார் கார்த்திக் சுப்புராஜ். அதோடு, பிரச்னை தீர்ந்தது எனக் கருதிய நிலையில் மீண்டும் தொடங்கியுள்ளது.
நேற்று, 'மெர்க்குரி' படத்தின் ட்ரெய்லரை ஏ.ஆர்.ரஹ்மான், ரக்‌ஷித் ஷெட்டி, துல்கர் சல்மான், நிதின் ஆகியோர் ட்விட்டரில் வெளியிட்டனர். சைலண்ட் படமாக மிரட்டும் வகையில் உருவாகியிருக்கிறது 'மெர்க்குரி'. இந்த ட்ரெய்லரில் ரிலீஸ் தேதி 13 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திரையுலகினரின் ஸ்ட்ரைக் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் ஸ்ட்ரைக் முடிவடையலாம் எனக் கருதப்படுகிறது. வேறு எந்தப் படங்களும் ரிலீஸுக்கு தயாராகாத நிலையில், தன்னிச்சையாக மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவேளை, தமிழில் மட்டும் ரிலீஸ் தள்ளிப்போகுமா என்பதும் தெரியவில்லை. இது மொழியற்ற திரைப்படம் எனத்தான் விளம்பரம் செய்கிறார்கள். அதை வைத்தே தமிழிலும் ரிலீஸ் செய்யும் முடிவில் இருக்கிறாரா கார்த்திக் சுப்புராஜ்? ஏன் மாற்றி மாற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார் என ரசிகர்களே கேட்கத் தொடங்கியுள்ளனர்.


Karthik subbaraj mentioned release date April 13 on 'Mercury' trailer. This made again controversy.


#mercury #trailer #karthiksubbaraj

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended