Skip to playerSkip to main contentSkip to footer
  • 4/6/2018
ஆக்ஷனில் சூர்யாவை பிரமாதமாக மிளிர வைத்தவர் என்றால் இயக்குநர் ஹரிதான். ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 என இருவரும் இணைந்த அத்தனைப் படங்களுமே ஆக்ஷனில் பட்டையைக் கிளப்பியவை. இப்போது சாமி 2 படத்தில் பிஸியாக உள்ள ஹரி, அடுத்து மீண்டும் சூர்யாவை வைத்து புதிய படம் பண்ணுகிறார். சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'NGK' படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படங்களுக்குப் பிறகு இருவரும் புதிய படத்துக்காக இணைகிறார்கள். இது நிச்சயம் போலீஸ் கதையாக இருக்காது என்றும், புதிய களத்தில் பயணிக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Director Hari is going to join with Surya for the 6th time.

Category

🗞
News

Recommended