Skip to playerSkip to main content
  • 8 years ago
ஸ்ரீதேவியின் மரணத்தால் போனி கபூரும் அவரின் மகன் அர்ஜுன் கபூரும் ஒன்று சேர்ந்துள்ளனர். நடிகை ஸ்ரீதேவி தன் வாழ்வில் வந்ததால் தயாரிப்பாளர் போனி கபூர் தனது முதல் மனைவி மோனா, மகன் அர்ஜுன், மகள் அன்சுலாவை பிரிந்தார். முதல் மனைவி, பிள்ளைகளை பிரிந்து ஸ்ரீதேவியுடன் வசித்தார். சிறுவயதிலேயே தங்களை தனியாக விட்டுச் சென்றதால் அர்ஜுன் கபூருக்கு தனது தந்தை மீது கோபம் இருந்தது. தன் தாயின் வாழ்க்கையை கெடுத்துவிட்டார் என்று அர்ஜுன் கபூருக்கு ஸ்ரீதேவி மீதும் கோபம் இருந்தது. இதனால் அவர் ஸ்ரீதேவியுடன் பேசியதே இல்லை. மேலும் அவர் பற்றி செய்தியாளர்கள் கேட்டால் ஸ்ரீதேவி என் தந்தையின் மனைவி அவ்வளவு தான் என்று கூறி வந்தார். அர்ஜுன் கபூர் விபுல் ஷாவின் நமஸ்தே கனடா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தந்தைக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என்பதற்காக இயக்குனரிடம் சொல்லிவிட்டு மும்பை வந்துவிட்டார்.


Legendary actress Sridevi's death has brought Boney Kpaoor and his actor son Arjun Kapoor together. Arjun was angry with Boney after he deserted him and his mother, sister for Sridevi.

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended