ஸ்ரீதேவியின் மரணத்தை பற்றிய மக்கள் கருத்து- வீடியோ

  • 6 years ago
அது எப்படி ஒருவர் குளியல் தொட்டியில் உள்ள நீரில் மூழ்கி இறக்க முடியும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நாத்தனார் மகன் மோஹித் மர்வாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார். இந்நிலையில் இது குறித்து நெட்டிசன்கள் கூறியிருப்பதாவது, ஆரோக்கியமான பெண்கள் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறப்பார்களா? என பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கேள்வி எழுப்பியுள்ளார். அது எப்படி ஒருவர் குளியல் தொட்டி நீரில் மூழ்க முடியும்... என்னால் இதை நம்பவே முடியவில்லை என்று ஒருவர் ட்வீட்டியுள்ளார். உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்திய ஸ்ரீதேவி எப்படி குளியல் தொட்டியில் மயங்கியிருக்க முடியும். இதில் ஏதோ இருக்கிறது.

Recommended