ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகமா?- வீடியோ

  • 6 years ago
ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் என்பது குறித்து வெளியாக தகவல்கள் பற்றி துபாய் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இடத்தில் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு இதற்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது இல்லை என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பேச்சு கிளம்பியது. ஸ்ரீதேவியின் உடற்கூறு ஆய்வறிக்கை துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆய்வறிக்கையின் நகலை ஸ்ரீதேவியின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளனர். 54 வயதிலும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஸ்ரீதேவி செய்து கொண்ட சர்ஜரிகளே அவரின் உயிரை குடித்துவிட்டதாக பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Recommended