ஸ்ரீதேவி கடைசியா அணிந்த புடவை காஞ்சிபுரம் பட்டு!- வீடியோ

  • 6 years ago

இறுதி ஊர்வலத்தின்போது ஸ்ரீதேவிக்கு சிவப்பு நிற காஞ்சிப்பட்டுப் புடவை அணிவிக்கப்பட்டிருந்தது.
உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி அங்கு உயிர் இழந்தார். இதையடுத்து அவரின் உடல் நேற்றிரவு மும்பை கொண்டு வரப்பட்டது.
மும்பையில் உள்ள செலபிரேஷன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வைக்கப்பட்ட ஸ்ரீதேவியின் உடலுக்கு ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென், ஹேமமாலினி, கஜோல், அஜய் தேவ்கன் உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர்.
ஸ்ரீதேவியின் உடல் மீது தேசியக் கொடியை போர்த்தி மகாராஷ்டிரா அரசு மரியாதை செய்தது. அவருக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு நடந்தது.
என்ன தான் டிசைனர் உடைகள் அணிந்தாலும் ஸ்ரீதேவிக்கு சிவப்பு நிற காஞ்சி பட்டுப்புடவை தான் பிடிக்குமாம். அதனால் அந்த புடவையையே அவர் மீது போர்த்தியிருந்தனர். மேலும் அவர் வழக்கமாக வெளியே வருவது போன்று ஃபுல் மேக்கப்பும் போடப்பட்டிருந்தது.

Recommended