சமூக வலைதளங்களில் இப்போதெல்லாம் நிறைய பிரபலங்கள் மிகவும் ஆக்டிவ்வாக உள்ளனர். நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் சமூக கருத்துகளை வெளியிடுவார். விழுப்புரம் அருகே திருக்கோவிலூரில் அடையாள தெரியாத கும்பல் ஒன்று ஆராயி, அவரது, மகன், மகள் ஆகியோரைக் கொடூரமாகத் தாக்கியுள்ளது. இதில் 8 வயது சிறுவன் பரிதாபமாகப் பலியானான். இந்தச் சம்பவம் குறித்து நடிகர் பிரசன்னா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மதுக்களும், ஆராயிகளும், வன்புணர்வுகளும் நாளும் நடந்தேறும் நம் ஊரைச் சீர்செய்யாமல் சிரியாவை நினைத்து உச்சுக்கொட்டி என்ன பயன்? என விளாசியிருக்கிறார் பிரசன்னா. விழுப்புரம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆராயி. அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று ஆராயியின் 8 வயது மகனைக் கொலை செய்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மதுக்களும், ஆராயிகளும், பிள்ளைக் கொலைகளும், வன்புணர்வுகளும் நாளும் நடந்தேறும் நம் முற்றத்தை சீர்செய்யாத நாம் சிரியாவின் படுகொலைகலை நினைத்து உச்சுக்கொட்டி என்ன பயன்? மனிதம் மரித்ததெப்போது? என வேதனையுடன் பதிவு செய்துள்ளார்.
Be the first to comment