Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
ஸ்ரீதேவியின் மரணத்திற்கு காரணம் இது தான் என்று கூறி ஒரு போஸ்ட் வரைலாகியுள்ளது. துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்நிலையில் பியாலி கங்குலி என்பவரின் போஸ்ட் ஒன்று வைரலாகியுள்ளது. வாட்ஸ்ஆப்பிலும் அந்த போஸ்ட் வைரலாகியுள்ளது. அந்த போஸ்டில் கூறியிருப்பதாவது, ஸ்ரீதேவி திடீர் என்று இறந்துவிட்டாரே என்று வருத்தப்படும் நாம் அவருக்கு ஏன் இப்படி நடந்தது என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர் ஒல்லியாக, 40 வயதை விட இளமையாக தெரிய வேண்டும் என்று சமூகம் விரும்பியதால் தொடர்ந்து சர்ஜரிகள் செய்து கொண்டார்.
பியாலி கங்குலியின் போஸ்ட்டை பார்த்த பலரும் ஸ்ரீதேவியை பற்றி எப்படி இவ்வாறு தரக்குறைவாக போஸ்ட் போடலாம் என்று கோபம் அடைந்துள்ளனர்.

Category

🗞
News

Recommended