ஏமி ஜாக்சன் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் இங்கிலாந்தை சேர்ந்த ஏமி ஜாக்சன். மேலும் ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு ஹாலிவுட்டில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். பாலிவுட் பக்கம் சென்றபோது நடிகர் பிரதீக் பாபரை காதலித்து அவரின் பெயரை கையில் பச்சை குத்தினார் ஏமி ஜாக்சன். அந்த காதல் முறிந்துவிட்டது. பிரதீக் பாபர் வேறு ஒரு பெண்ணை காதலித்து அண்மையில் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஏமிக்கு இந்த ஆண்டு திருமணம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. திருமணம் ஆனாலும் தொடர்ந்து நடிப்பது என்று முடிவு செய்துள்ளார் ஏமி. ஏமி புதுப் படங்கள் எதிலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு வேலை திருமணத்திற்காக தான் இப்படி செய்கிறார் போன்று என்று கூறப்படுகிறது.
According to reports, England beauty Amy Jackson is set to marry her British boyfriend businessman George Panayiotou this year. They have been dating for quite some time now.
Be the first to comment