நடிகை குஷ்பு ட்விட்டரில் செம ஆக்டிவ்வாக இருப்பவர். சினிமா தாண்டி அரசியல், பொதுவான பிரச்னைகள் என எல்லாவற்றைப் பற்றியும் ட்வீட் செய்வார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளராகப் பணியாற்றும் குஷ்பு, அரசியல் பிரச்னைகளையும், எதிர்க்கட்சி பஞ்சாயத்தையும் கேசுவலாக டீல் செய்பவர். தற்போது, குஷ்பு குடும்பத்திலுள்ள அனைவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறதாம். இந்தத் தகவலை அவரே ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் மிகவும் ஆக்டிவ்வான நடிகை என்றால் குஷ்பு தான். அரசியல், சினிமா, பொது பிரச்னைகள் என எல்லா விஷயத்துக்கும் குரல் கொடுப்பார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளராகவும் இருப்பதால் இவரது கருத்து முக்கியமானதாக எடுத்துக் கொள்ளப்படும். உடல்நிலை பாதிப்பு தற்போது குஷ்பு குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறதாம். இதுகுறித்து அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அவருக்கும் விஷத் தேனீக்கள் கொட்டி வீக்கமாக இருக்கிறதாம். சுந்தர்.சி உடல்நிலை கணவர் சுந்தர்.சி கடந்த ஐந்து நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். மாமியாருக்கும் உடம்பு சரியில்லை. என் இளைய மகளுக்கும் இப்போதுதான் காய்ச்சல் சற்று குணமாகி இருக்கிறது. விஷத்தேனீக்கள் கொட்டியதால் எனது அம்மாவின் பெருவிரலில் இருக்கும் சில பிளவுகளால் அவதிப் படுகிறார். எனது கையில் விஷத் தேனீக்கள் கொட்டி நீலநிறமாக இருக்கிறது. மோசமான நாட்களாக இருக்கிறது' என சோகமாகப் பதிவு செய்துள்ளார். ரசிகர்கள் வேண்டுதல் இந்தத் தகவலை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அவர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தொகுப்பாளினி அம்மு ஆகியோரும் குஷ்பு விரைவில் குணமடைய வேண்டியுள்ளனர்.
Actress Khushbu is always active in Twitter. Currently, everyone in Khushbu's family is in ill. Khushbu has been posted this information on Twitter.