கவுதம் கார்த்திக் எப்படிப்பட்டவர் என்று இயக்குனர் ஆறுமுக குமார் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா உள்ளிட்டோரை வைத்து ஆறுமுக குமார் எடுத்துள்ள படம் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன். படம் வரும் பிப்ரவரி மாதம் 2ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய ஆறுமுக குமார் கூறியதாவது, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ஒரு சூப்பர் காமெடி படம். நானும், விஜய் சேதுபதியும் சந்தித்து பழகியது குறித்து அவர் கூறினார். நான் அதே மாதிரி பழகுவது பெரிய விஷயம் அல்ல. அவர் விஸ்வரூப வளர்ச்சி அடைந்துள்ளார். ஆனால் அவருடைய பழக்கம் பழையபடியே இருப்பது பிரமிப்பாக உள்ளது. இந்த கதாபாத்திரம் கவுதம் கார்த்திக்கிற்காகவே உருவாக்கப்பட்டது போல் உள்ளது. இந்த படத்தில் கவுதம் நடித்த பிறகு இந்த படத்தின் கதையை வேறு யாரை வைத்தும் என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை. கவுதம் தத்ரூபமாக இருந்துள்ளார். கொஞ்சம் கூட வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாத கதாபாத்திரம் கவுதமுடையது. மேடையில் அவர் டீசன்டாக இருப்பார். ஆனால் நார்மலாகவே அவர் ஜாலியாக இந்த மாதிரி எதுவுமே இல்லாமல் தான் இருப்பார். இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் விஜய் சேதுபதியின் சுமார் மூஞ்சி குமாரு பேசப்பட்டது போன்று கவுதம் கார்த்திக்கின் இந்த கதாபாத்திரம் பேசப்படும். கவுதம் செமயாக நடித்துள்ளார் என்றார் ஆறுமுக குமார்.
Oru Nalla Naal Paathu Solren director Arumuga Kumar said in a press meet that Gautham Karthik has acted as a shameless person in his movie that is hitting the screens on february 2nd.