Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
பிரபாஸுக்கு இந்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று அவரின் பெரியப்பா கிருஷ்ணம் ராஜு தெரிவித்துள்ளார். பாகுபலி படத்தில் நடித்ததில் இருந்து பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் காதல் என்று கூறப்படுகிறது. நிஜ வாழ்க்கையிலும் அவர்கள் இணைய வேண்டும் என்று அவர்களின் ரசிகர்கள் விரும்புகிறார்கள். பிரபாஸை திருமணம் செய்ய ஆயிரக்கணக்கான பெண்கள் விருப்பம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபாஸுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்று கேள்வி பல மாதங்களாக கேட்கப்படுகிறது. இந்நிலையில் அந்த கேள்விக்கு அவரது பெரியப்பா கிருஷ்ணம் ராஜு பதில் அளித்துள்ளார். ஒவ்வொரு பேட்டியிலும் பிரபாஸின் திருமணம் பற்றி கேட்கிறார்கள். பிரபாஸுக்கு இந்த ஆண்டு நிச்சயம் திருமணம் நடக்கும். அவரும் திருமணம் செய்ய விருப்பமாக உள்ளார் என்று கிருஷ்ணம் ராஜு தெரிவித்துள்ளார். நானும், பிரபாஸும் கராதலிக்கவில்லை. நல்ல நண்பர்கள் மட்டுமே. நல்ல பையன் கிடைத்தால் உடனே திருமணம் செய்து கொள்வேன் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுஷ்கா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Prabhas's uncle Krishnam Raju said in an interview that his world famous nephew is definitely getting married this year. He added that Prabhas is willing to settle down.

Category

🗞
News

Recommended