Skip to playerSkip to main contentSkip to footer
  • 1/20/2018
அறிமுக இயக்குநர் காலீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடிக்கும் 'கீ' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி சினிமா நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்களின் யதார்த்தத்தைப் பேசினார்.

விஜய் சேதுபதி கோபமாகப் பேசினாலும், அவரது பேச்சு பெரும்பாலானோரைக் கவர்ந்தது. உண்மையான அக்கறையுடன் பேசியதாகப் பலரும் தெரிவித்தனர்.விஜய் சேதுபதி பேசியதாவது, "நம்ம பிரச்னையை நாம் பேசித் தீர்த்துக்கணும். பொது இடங்களுக்குக் கொண்டுவந்து அடிச்சிக்கக் கூடாது. இப்போதெல்லாம் சினிமாக்காரன் என்றாலே ஒரு மாதிரி பார்க்கிறார்கள். தரம் தாழ்த்திப் பேசுகிறார்கள். மொத்தமாக சினிமாக்காரர்களை கை காட்டிப் பேசும்போது வருத்தமாக உள்ளது.சினிமாகாரர்களை குறைவாக நினைப்பவர்கள் சினிமாவுக்கு வந்து ஒரு படம் எடுத்துப் பாருங்கள். தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்களுக்குரிய பிரச்னைகள் உங்களுக்குத் தெரியும். ஒரு படம் எடுத்து முடிக்கும்போதும் உயிர் போய் உயிர் வருகிறது.

Jeeva and Nikki galrani plays lead roles in the movie 'Kee'. Vijay Sethupathi talked reality of cinema artists life in the audio launch event of 'Kee'. "If four films are getting flop, nobody will come to our home side", says Vijay Sethupathi.

Category

🗞
News

Recommended