Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
விஜய் தனது 62 வது படத்தில் நடிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார். முருகதாஸ் இயக்கும் இந்தப் படம் விரைவில் ஆரம்பமாகிறது. இந்தப் படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கான ஆயத்தப் பணிகள் இப்போதே ஆரம்பமாகிவிட்டன. இந்தப் படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத் இயக்குவார் என தகவல் கசிந்துள்ளது. இந்தப் படத்தைப் பார்த்து மிகவும் ரசித்த விஜய், வினோத்தை வெகுவாகப் பாராட்டினார். கதைகள் குறித்தும் பேசியுள்ளார். ஆனால் முழு ஸ்கிரிப்டும் தயாராகும் வரை இதுகுறித்து எதுவும் சொல்வதற்கில்லை என அமைதி காக்கிறார் வினோத். விஜய்க்காக வினோத் தயார் செய்யும் இந்தப் புதிய கதை முழுக்க முழுக்க நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்படும் எனத் தெரிகிறது.

Category

🗞
News

Recommended