வைரமுத்து தமிழ் சினிமாவுக்கு தன் பாடல்களால் பெருமை சேர்த்தவர் என்பதெல்லாம் சம்பிரதாய புகழ். சினிமா பாடல்களில் புது புது சொற்றொடர்களை புகுத்தி தமிழுக்கு பெருமை கூட்டிய படைப்பாளி அவர். இன்றைக்கு குறிப்பிட்ட ஒரு பிரிவினரால் வதைக்கப்பட்டு கொண்டிருக்கிறார். சினிமா மேடைகளிலும், பொது மேடைகளிலும் வைரமுத்து பேசுகின்ற போது மேற்கோள் காட்டுவதற்கு இலக்கியங்களையும், ஆய்வு கட்டுரைகளையும், அறிஞர்கள் கருத்துகளையும் துணைக்கு அழைத்துக் கொள்வது வாடிக்கை.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பற்றி பேசியதிலும், எழுதியதிலும் அப்படி ஒரு மேற்கோள் கையாளப்பட்டதன் விளைவாக வைரமுத்து மட்டுமல்ல, அவரது வம்சாவழிகளையும், குடும்பத்தாரையும் அநாகரிக வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். தொலைக்காட்சி ஊடகங்கள் அதன் அனல் குறையாமல் ஊதிப் பெரிதாக்கி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றன.
Why film industry keep silence in Vairamuthu issue? Here is an analysis.