சிக்கிம் மாநில அரசு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை அந்த மாநிலத்தின் விளம்பரத் தூதராக அறிவித்துள்ளது. அந்த மாநிலத்தின் அமைச்சருக்குரிய அந்தஸ்தும், அனைத்து கௌரவங்களும் இதன் மூலம் ரஹ்மானுக்கு கிடைக்கும். சிக்கிம் தலைநர் காங்டாக்கில் நேற்று நடந்த குளிர்காலத் திருவிழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய சிக்கிம் மாநில முதல்வர் பவன்குமார் சாம்லிங், ரஹ்மானை சிக்கிம் மாநிலத்தின் விளம்பரத் தூதராக பணியாற்றுமாறு அன்புடன் அழைப்பு விடுத்தார்.
அதனை ஏ.ஆர்.ரஹ்மானும் ஏற்றுக் கொண்டார். இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது, "சிக்கிம் மாநிலம் சகிப்புத்தன்மை, ஒற்றுமை, அமைதி, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு உதாரணமாக திகழ்கிறது. எனக்கு முக்கியத்துவம் தந்து என்னை கவுரவிக்கும் விதமாக அளித்த தூதர் பணியை நான் பெருமையுடன் ஏற்றுக் கொள்கிறேன். அதை சிறப்புடன் செய்வேன்" என்றார். இன்று அதற்கான அரசு அறிவிப்பு முறைப்படி வெளியாகிறது. ஏ.ஆர்.ரஹ்மானை தமிழகம் தவிர மற்ற அனைத்து மாநில அரசுகளும் இந்தியாவின் பெருமையாகக் கருதுகின்றன. அவருக்கு பல்வேறு விருதுகளையும், சிறப்புகளையும் செய்து வருகின்றன.
Sikkim government has announced the music director AR Rahman as the Sikkim state's brand ambassador.
Be the first to comment